News April 26, 2024
பள்ளி மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது

பள்ளிக் மாணவர்களை எந்த விதத்திலும் தண்டிக்கக் கூடாது என அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்த விதிகளைக் கட்டாயம் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக மாணவர்களை அடிப்பது போன்ற தண்டனைகளைத் தடுக்க வேண்டும் என ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது.
Similar News
News March 4, 2026
பாஜகவின் கொட்டமும், ஆணவமும் கூடுகிறது: CM

இந்தித் திணிப்பு வெறியில் பாஜக எல்லை மீறிச் செல்வதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். <<19294297>>திருச்சி மண்டல ரயில்வே<<>> அலுவலக நுழைவு வாயிலில் இந்தி, EPFO அலுவலகத்துக்கு ‘பவிஷ்ய நிதி பவன்’ என்ற பெயர், நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் ‘ஜல் சக்தி’ என இந்தி திணிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். கூடிக்கொண்டே செல்லும் பாஜகவின் ஆணவத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.
News March 4, 2026
விவசாயிகளை தேடி வரும் அரசு திட்டம்

வேளாண் நலத்துறையின் அனைத்து திட்டங்களையும் அதன் பயனையும் நேரடியாக விவசாயிகளின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்கிறது உழவரைத் தேடி வேளாண்மை திட்டம். இதன் கீழ், விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது & 4-வது வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு கிராமங்களில் நடக்கும். விவசாயிகளே, உங்களுக்கு சந்தேகங்கள், கோரிக்கைகள் இருந்தால் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம். SHARE.
News March 4, 2026
ஓவர் ஸ்பீடு.. தோனிக்கே ஷாக்!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பைக்கில் வேகமாக சென்றதற்காக Ex. கேப்டன் தோனிக்கு ₹1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பைக் ஓட்டுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருக்கும் தோனி, தன்னுடைய வீட்டில் மிகப்பெரிய பைக் கலெக்ஷனே வைத்திருக்கிறார். தோனியாக இருந்தாலும் விதிமீறலுக்கு அபராதம் விதித்ததை மக்கள் பாராட்டி வருகின்றனர்.


