News December 1, 2025
நாமக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)
Similar News
News December 3, 2025
நாமக்கல்: வாக்காளர் திருத்த படிவம் காலஅவகாசம் நீட்டிப்பு!

நாமக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட SIR வாக்காளர் திருத்த படிவங்களை சமர்ப்பிக்க டிச.04ந் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பல்வேறு காரணங்களால் படிவங்களை சமர்ப்பிக்க டிச.11ந் தேதி வரை நீட்டிப்பு செய்து காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கடைசி தேதிக்கு முன்பாக படிவங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
News December 3, 2025
நாமக்கல்: ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

சமூகநலன் (ம) மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கான ஔவையார் விருது பெற டிச.31ந் தேதி வரை நாமக்கல்லை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து இன்று (புதன்) மற்றும் வரும் நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 பெங்களூரூ வந்தே பாரத் ரயில் உள்ளன. நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்! நாமக்கலில் இருந்து பெங்களூரூ, மைசூரு, ஹூப்ளி போன்ற பகுதிகளுக்கு செல்ல நல்ல ரயில்வசதி உள்ளதால் நாமக்கல் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.


