News April 26, 2024
விருதுநகர் ஆட்சியர் முக்கிய தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் அந்தந்த வட்டார வள மையத்தில் நடைபெற உள்ளது. வரும் மே 1 முதல் மே 11 வரை ஓவியம், கலை, போஸ்டர் தயாரித்தல், இணைய வழி பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற உள்ளன. எனவே பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற மாணவர்களுக்கு ஆட்சியர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News February 18, 2026
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வரும் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 20க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளன. எனவே வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இது முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
News February 18, 2026
வட்டார ஒருங்கிணைப்பாளர் காலியிடங்கள் அறிவிப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியுடையோர் www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
News February 18, 2026
விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரி 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20ம் தேதி அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


