News April 26, 2024

பாஜகவின் வெற்றிக்கு உதவிய காங்., வேட்பாளர் சஸ்பெண்ட்

image

சூரத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வேண்டுமென்றே வேட்புமனுவை தவறாக நிரப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கட்சி அவரை 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நீலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இந்நிலையில் கும்பானி பாஜகவுடன் இணைந்து சதி செய்திருக்கலாம் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி விசாரணையை தொடங்கியுள்ளது.

Similar News

News March 31, 2026

BREAKING: விஜய் மீது வழக்குப்பதிவு

image

சென்னை, கொளத்தூரில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக விஜய் பரப்புரையில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொளத்தூரில் 500 பேர் கூடுவார்கள் என கூறி அனுமதி வாங்கிவிட்டு 5,000 பேரை கூட்டியதாகவும், 5 ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி பெற்று 30 ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் விஜய் மீது பதியப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News March 31, 2026

மது குடிப்போர் வாக்கு எனக்கு வேண்டாம்: சீமான்

image

மது குடிப்போர் வாக்கு தனக்கு வேண்டாம். நல்ல குடிமக்கள் வாக்கு மட்டும் போதும் என சீமான் பேசியுள்ளார். டாஸ்மாக் வருமானம் ₹50,000 கோடி மூலம் திமுக ஆட்சி நடத்துவதாக கூறிய அவர், மது பழக்கத்தால் தமிழ் மக்கள் உழைக்கும் திறனற்றவர்களாக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தான் திமுக போல திருட்டு நிதியில் கட்சி நடத்தவில்லை; மக்களிடம் திரள் நிதி வாங்கி கட்சி நடத்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.

News March 31, 2026

FLASH: கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

TN-ல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களை ஒட்டிய கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இது தொடர்பாக IMD விடுத்துள்ள அறிவிப்பில், மேற்கு விதர்பா முதல் TN வரை காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. அதேபோல், குமரிக்கடல் முதல் வடக்கு உள் கர்நாடகா வரை மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. <<-se>>#TNRains<<>>

error: Content is protected !!