News December 1, 2025
விழுப்புரம்: மனைவி பிரிந்ததால் கணவன் விபரீத முடிவு!

மரக்காணம் வட்டம், பனிச்சமேடுகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ், அவரது மனைவி ரேகா. இவர்களிடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த சதீஷ் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
விழுப்புரம்: கடனை திருப்பிக்கேட்ட நபர்.. அடி பொளந்த பெண்!

விழுப்புரம்: திண்டிவனம் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் மணிபாலன் (34). இவர் அப்பாவு நகரைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி ராதிகாவுக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். பின்னர் ராதிகாவிடம் பணத்தை திருப்பி கேட்டபோது, ஆத்திரமடைந்த ராதிகா, மணிபாலனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ராதிகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News December 1, 2025
விழுப்புரம்: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 1, 2025
விழுப்புரம்: தட்டிக்கேட்ட முதியவருக்கு கத்திக்குத்து!

விழுப்புரம்: எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (68). நேற்று முன்தினம், இரவு 11 மணிக்கு அவரது வீட்டின் அருகே 2 பேர் மதுபோதையில் சத்தமாக பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட தேவராஜை, ஆத்திரத்தில் அந்த 2 பேரும் கத்தியால் குத்தியுள்ளனர். தொடர்ந்து, முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முருகன், (25), ராம்குமார் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


