News April 26, 2024
தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்.6ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகராத்தில், நயினார் நாகேந்திரனின் உறவினர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கின் ஆவணங்களை சிபிசிஐடியிடம், தாம்பம் போலீசார் ஒப்படைக்க உள்ளனர்.
Similar News
News September 26, 2025
செங்கல்பட்டு காவல்துறை அறிவுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் சாலையில் செல்லும் போது வெளிச்சம் குறைந்து காணப்படுகிறது. இதனால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே மழை பொழியும் நேரங்களில் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு செல்லும்படி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
News September 26, 2025
செங்கல்பட்டு: திருமணம் செய்ய போகும் பெண்களின் கவனத்திற்கு

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.
News September 26, 2025
செங்கல்பட்டில் கிராம சபை கூட்டம் ரத்து

தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளிலும், குடியரசு, சுதந்திரம், மே தினம், காந்தி ஜெயந்தி, உட்பட்ட பல்வேறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பேசப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆக்.2ஆம் தேதி அன்று நடைபெறாது எனவும், அதற்கு பதில் ஆக்.11ஆம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.