News April 26, 2024
சேலம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மே முதல் வாரத்தில் வெப்ப அலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேசமயம் மே 5ம் தேதி முதல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதன்படி, ஈரோடு, சேலம், தருமபுரி போன்ற உள்மாவட்டங்களில் மே முதல் வார இறுதியில் இருந்து இரண்டாவது வாரம் வரை மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 20, 2024
நாதகவில் இருந்து மேலும் ஒருவர் விலகல்
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டம், மேட்டூர் நகர துணைத் தலைவராக உள்ள ஜீவானந்தம் ராஜா கட்சியில் இருந்து விலகுவதாக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் அறிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து மேலும் 40 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். நாதக-வில் இருந்து தொடர்ந்துஅடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News November 20, 2024
CRIME TIME(1): யார் இந்த “தார் கேங்”
சேலத்தில் உள்ள தொட்டில்பட்டி அருகே 60 வீடுகள் கொண்ட குடியிருப்பில், கடந்த 7ஆம் தேதி 12 வீடுகளின் கதவுகள் உடைத்து 13 பவுன் நகை, 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், இது “தார் கேங்கின்” வேலையாக இருக்கலாம் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். யார் இந்த “தார் கேங்” (படிக்க அடுத்த பக்கம் திருப்புங்க)
News November 20, 2024
CRIME TIME(2): யார் இந்த “தார் கேங்”
ம.பி. தார் மாவட்டத்தில் மலைக்கிராமத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலை “தார் கேங்” என்பார்கள். இவர்கள் தமிழ்நாட்டில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் வீட்டின் தாழ்ப்பாளை கட்டிங் பிளேடால் உடைத்து கொள்ளையடிப்பது இவர்களது நேர்த்தி. கொள்ளை அடிப்பதற்கு முன் தங்களது குலதெய்வத்தை வழிபட்டு செல்வார்கள். அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்களை நடப்பதற்கு முன் இந்த கேங்கை சுற்றி வளைக்குமாக போலீஸ்?