News November 30, 2025
ஒரே இரவில் பூக்களால் நிரம்பும் பாலைவனம் தெரியுமா?

பாலைவனம் என்றாலே வறண்டு காணப்படும். ஆனால் Namaqualand பாலைவனம், குளிர்காலத்தில் ஒரே இரவில் பூக்களால் நிரம்பி விடும். இங்குள்ள பல அரிய தாவர இனங்கள், பூமிக்கு கீழே வறட்சியை தாங்கி கொண்டு உறக்க நிலையில் இருக்கும். ஆனால், இவை குளிர்காலத்தில் மழை பெய்ததும், ஈரப்பதத்தை உறிஞ்சி ஒரே இரவில் முளைத்து, பூக்களின் தோட்டமாக மாறிவிடுகிறது. இந்த அரிய காட்சியை ஆகஸ்ட், செப்டம்பரில் மட்டுமே பார்க்க முடியும்.
Similar News
News December 1, 2025
புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோ? வெளியான புது அப்டேட்

புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு தொடர்ந்து 3-வது நாளாக DGP அலுவலகத்தை புஸ்ஸி ஆனந்த் நாடியுள்ளார். நேற்று அலுவலகத்தை விட்டு வெளியே சென்றபோது எதுவும் பேசாமல் சென்ற அவர், தற்போது, நாளை மீண்டும் ஆலோசனைக்கு பிறகு முடிவு தெரியும் என அப்டேட் கொடுத்துள்ளார். வரும் 5-ம் தேதி புதுச்சேரியின் காலாப்பட்டு முதல் கன்னிக்கோவில் வரை விஜய்யின் ரோடு ஷோவை நடத்த தவெக திட்டமிட்டுள்ளது.
News December 1, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தது HAPPY NEWS

மகளிர் உரிமைத் தொகை குறித்த மகிழ்ச்சியான அப்டேட் வெளியாகியுள்ளது. புதிதாக இணைந்தவர்களின் விவரம் இந்த வாரம் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிச.15 முதல் அவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கப்பட உள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் வ<<18422492>>ங்கிக் கணக்கு விவரங்களை<<>> அரசு அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். தவறான வங்கிக் கணக்கிற்கு பணம் செல்லக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
News December 1, 2025
நவம்பர் GST வசூல் ₹1.70 லட்சம் கோடி

அக்டோபரில் ₹1.95 லட்சம் கோடியாக வசூலான GST, நவம்பரில் ₹1.70 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. மேலும், CGST கடந்த ஆண்டு நவம்பரோடு ஒப்பிடுகையில், ₹34,141 கோடியில் இருந்து ₹34,843 கோடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும், SGST வசூல் ₹43,047 கோடியிலிருந்து ₹42,522 கோடியாக குறைந்துள்ளது. அதேபோல், IGST வசூல் ₹50,093 கோடியிலிருந்து ₹46,934 கோடியாக குறைந்துள்ளது.


