News November 30, 2025

காசியின் கலாசார அடையாளமானது தமிழ்: PM

image

மன் கி பாத் உரையில் PM மோடி, நவம்பர் பல உத்வேகங்களை கொண்டு வந்துள்ளதாக கூறினார். மகளிர் உலக கோப்பை வெற்றி, ராமர் கோயில் கொடியேற்றம் என பல்வேறு நிகழ்வுகளை நினைவு கூர்ந்த அவர், காசி தமிழ்ச் சங்கமத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தார். காசியின் கலாசார அடையாளமாக தமிழும், தமிழ் மக்களும் மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தமிழை கற்பதே சங்கமத்தின் முக்கிய கருப்பொருள் என்றும் அவர் கூறினார்.

Similar News

News December 1, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

image

கனமழை காரணமாக சென்னையில் நாளை(டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி உத்தரவிட்டுள்ளார். தொடர் கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவள்ளூர், செங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை நீடிப்பதால் அங்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. உடனடி தகவலுக்கு WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.

News December 1, 2025

வெதுவெதுப்பான நீர் குடிப்பதன் நன்மைகள்

image

மழை மற்றும் குளிர் காலங்களில் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும். இது தினசரி ஆரோக்கிய பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News December 1, 2025

RO-KO ஜோடியை நினைத்து கவலை வேண்டாம்: பதான்

image

RO-KO ஜோடியின் எதிர்காலம் குறித்து ரசிகர்கள் கவலைப்படுவதை நிறுத்த வேண்டும் என இர்ஃபான் பதான் அறிவுறுத்தியுள்ளார். இந்த 2 லெஜெண்ட்களும் தங்களது கடைசி கட்ட கிரிக்கெட் கரியரை சுதந்திரமாக விளையாடட்டும், ரசிகர்களாகிய நாம் அதை ரசிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ODI WC-க்கு இருவரும் தகுதி பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!