News April 26, 2024
சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை!

பெரம்பலூர் கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் நேற்று(ஏப்.25) பைக் ஓட்டிச் சென்று விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து மோட்டார் வாகனச் சட்டம் 1988 – 199A பிரிவு படி, 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்கள் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. இது போன்று அலட்சியமாக உள்ள பெற்றோர், பாதுகாவலர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.25,000 அபதாரம் விதிக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News August 22, 2025
புதிய பல்நோக்கு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ

ஆலத்தூர் ஒன்றியம், புது விராலிப்பட்டி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 22) பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு கட்டடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அடிக்கல் நாட்டினார். இதில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வல்லபன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News August 22, 2025
பெரம்பலூர்: அரசு வங்கியில் வேலை; மாதம் ரூ.48,000 சம்பளம்

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள்<
News August 22, 2025
பெரம்பலூர்: சிலிண்டர் புக் பண்ண ஈஸியான வழி

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!