News November 30, 2025

டிகிரி போதும்.. வங்கியில் 2,700 காலியிடங்கள்!

image

பேங்க் ஆப் பரோடாவில் உள்ள 2,700 Apprentice பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ★தமிழகத்தில் 159 காலியிடங்கள் உள்ளன ★கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ★தேர்ச்சி முறை: Online Examination, Test of local language of the State ★வயது: 20 – 28 வரை ★சம்பளம்: ₹15,000 ★1.12.2025 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 3, 2025

கனமழை… அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு

image

கனமழை எதிரொலியாக அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 3, 2025

Cinema 360°: ₹62.47 கோடி வசூலித்த தனுஷின் இந்தி படம்

image

*அனுபமாவின் ‘லாக்டவுன்’ படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது *தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ இந்தியாவில் மட்டும் இதுவரை ₹62.47 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு *திவ்ய பாரதி நடித்துள்ள ‘GOAT’ டீசர் வெளியாகியுள்ளது. *அவெஞ்சர்ஸ்: டூம்ஸ் டே டீசர் டிச.7-ம் தேதி ரிலீசாகிறது. *பசுபதியின் ‘குற்றம் புரிந்தவன்’ வெப் தொடர் டிச.5 முதல் சோனி லைவ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.

News December 3, 2025

சிரஞ்சீவியை போல் விஜய் சறுக்குவார்: தமிழருவி மணியன்

image

அதிமுக அணியில் தவெக இடம்பெற EPS-ஐ CM வேட்பாளராக விஜய் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழருவி மணியன் கூறியுள்ளார். இதற்கு வாய்ப்பில்லை என்ற அவர், இதனால் கூட்டணி அமையவும் வாய்ப்பு கிடையாது என தெரிவித்துள்ளார்.. மேலும், எப்படி ஆந்திராவில் சிரஞ்சீவி ஒரு அனுபவத்தைப் பெற்றாரோ அதே அனுபவத்தை விஜய் பெறுவார் எனவும், சிரஞ்சீவியை போல் கண்டிப்பாக சறுக்குவார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!