News April 26, 2024
காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேருக்கு அபராதம்

பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த இருவரை தாக்கியதாக 2019ல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் மீது மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் இழப்பீட்டு தொகையை ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரிடமும் சமமாக அரசு அபராதமாக வசூலித்துக் கொள்ளலாம் எனவும் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் இன்று (ஏப். 26) உத்தரவிட்டார்.
Similar News
News March 4, 2026
நெல்லையில் சினிமா பாணி சம்பவம்; 60 பேரிடம் சோதனை

பாளை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று திருச்செந்தூருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் கோட்டுரை சேர்ந்த நம்பி அம்மாள் என்ற மூதாட்டி ஏறினார். பஸ் சற்று தொலைவில் உள்ள கோர்ட்டை கடந்து சென்றபோது மூதாட்டி அணிந்திருந்த 2 பவுன் நகை திருட்டு போனதாக சத்தம் போட்டார். டிரைவர் பேருந்தை பாளை ஸ்டேஷனிற்கு ஓட்டி வந்தார். குற்றப்பிரிவு போலீசார் 60 பயணிகளிடம் சோதனை நடத்தினர். நகைகள் சிக்கவில்லை.
News March 4, 2026
நெல்லையில் சந்திர கிரகணத்தை பார்த்த மக்கள்

இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணியைத் தாண்டி சந்திர கிரகணம் நீடித்தது. இதை பார்வையிட நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை 6.30 மணி முதல் பொதுமக்கள் அறிவியல் மையத்தில் வைக்கப்பட்டிருந்த சிறப்பு கருவி மூலம் சந்திரன் தோற்றத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
News March 3, 2026
BREAKING: நாங்குநேரி இரட்டை கொலையில் அதிர்ச்சி தகவல்..!

நாங்குநேரியில் நேற்று இரவு இரண்டு பேர் கொலை செய்யபட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அதில் 2023ம் ஆண்டு மாணவர் சின்ன துரையை தாக்கிய வழக்கில் கைதான சுபாஷ், கல்யாணி ஆகிய இருவர் தற்போது நாங்குநேரியில் இரட்டை கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னதுரையை தாக்கிய வழக்கில் கைதான 2 பேர் இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்னும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது


