News November 30, 2025
நாகை: புயலால் சாலையில் முறிந்து விழுந்த மரம்

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகில் உள்ள இலுப்பூர் கிராமத்தில் டிட்வா புயலின் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் மெயின் ரோடு அருகே சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், ஊராட்சி நிர்வாகம் தொழிலாளர்களை கொண்டு உடனடியாக மரக்கிளைகள் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டது.
Similar News
News December 16, 2025
நாகை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.16) மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News December 16, 2025
நாகை: இழந்த பணத்தை மீட்க எளிய வழி!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 16, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், வரும் டிச.17 – டிச.26 வரை ஒரு வார காலத்திற்கு ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வணிக நிறுவனங்கள், உணவகங்கள் முதலியவற்றில் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட உள்ளன. எனவே இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.


