News November 30, 2025

நாமக்கல்லில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

பள்ளிபாளையம் டிஎஸ்பி கெளதம் உள்ளிட்ட போலீசார் நேற்று மதுபான கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக ஜீவா செட் பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடை சோதனையிட்டபோது அனுமதி இல்லாமல் 247 மது பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது .இதனை எடுத்து சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கோபி கண்ணன் என்பவரை கைது செய்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 3, 2025

நாமக்கல்: வாக்காளர் திருத்த படிவம் காலஅவகாசம் நீட்டிப்பு!

image

நாமக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட SIR வாக்காளர் திருத்த படிவங்களை சமர்ப்பிக்க டிச.04ந் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பல்வேறு காரணங்களால் படிவங்களை சமர்ப்பிக்க டிச.11ந் தேதி வரை நீட்டிப்பு செய்து காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கடைசி தேதிக்கு முன்பாக படிவங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

News December 3, 2025

நாமக்கல்: ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

image

சமூகநலன் (ம) மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கான ஔவையார் விருது பெற டிச.31ந் தேதி வரை நாமக்கல்லை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News December 3, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து இன்று (புதன்) மற்றும் வரும் நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 பெங்களூரூ வந்தே பாரத் ரயில் உள்ளன. நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்! நாமக்கலில் இருந்து பெங்களூரூ, மைசூரு, ஹூப்ளி போன்ற பகுதிகளுக்கு செல்ல நல்ல ரயில்வசதி உள்ளதால் நாமக்கல் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.

error: Content is protected !!