News April 26, 2024
தொழிலாளர்களுக்கு வசதி செய்து கொடுங்கள்

கோடை வெயிலைச் சமாளிக்கத் தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு பணி நிறுவனங்களுக்குத் தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தொழிற்சாலைகள், கட்டுமானப் பணி போன்ற வெப்பம் அதிகமாக இருக்கும் துறையில் பணிபுரிபவர்களுக்குச் சுழற்சி முறையில் வேலை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணிக்கத் துணை இயக்குநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News March 19, 2026
ECI-க்கு பெட்ரோலிய டீலர்கள் முக்கிய கோரிக்கை

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பணத்தை கொண்டு செல்வதில் பலரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர். இந்நிலையில், பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் உள்ள சட்டப்பூர்வமான பணத்தை பறிமுதல் செய்யாமல் அனுமதிக்க வேண்டும் என்று பெட்ரோலிய டீலர்கள் ECI-க்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால், 75% விற்பனை பணமாக நடைபெறுவதாகவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு பணமாக கொடுக்கவுள்ளதாலும் இக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
News March 19, 2026
அஜித்குமார் மரணம்: தேர்தலில் தாக்க காத்திருக்கிறதா?

தற்போதைய ஆட்சியில் 25 கஸ்டடி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. அஜித்குமார் முதல் ஆகாஷ் வரை தென் மாவட்டங்களில் மரணங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. காரணம், 2020-ல் சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த விவகாரம் 2021 தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
News March 19, 2026
தேர்தல் ஆணையத்தின் கையில் ‘ஜன நாயகன்’

‘ஜன நாயகன்’ படத்தின் மறுதணிக்கையில், ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்த காட்சிகள் நீக்கப்பட்டதால் வாரிய அதிகாரிகள் திருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் நடந்த இத்தணிக்கையை அடுத்து ரிலீஸ் அனுமதிக்காக ECI-க்கு அனுப்பப்பட்டுள்ளதாம். படத்தின் நாயகனான விஜய் அரசியல் கட்சி தலைவராக உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளின்படி ’ஜன நாயகன்’ படத்தை ஆய்வுசெய்து ரீலிஸ் குறித்து ECI முடிவெடுக்குமாம்.


