News April 26, 2024
மோடி கண்ணீர் விடத் தயாராகி விட்டார்

பிரதமர் மோடியின் பேச்சுக்களைப் பார்க்கும் போது அவர் மிகவும் பதற்றமாக இருப்பது தெரிவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற பிரதமர் முயல்வார் என்று கூறிய அவர், மக்கள் மோடியிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றார். முன்னதாக, இடஒதுக்கீடு, இஸ்லாமியர்கள் விவகாரங்களில் பிரதமரும், ராகுலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
Similar News
News August 14, 2025
துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தின கொண்டாட்டம்: 3 பேர் பலி

இன்று பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி லியாரி உள்ளிட்ட பல இடங்களில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 64 பேர் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே பலுசிஸ்தான் படை – பாக்., ராணுவம் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
News August 14, 2025
இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ் லிஸ்ட்

இந்த வாரம் மரண மாஸான படங்கள் திரைக்கு வந்துள்ளன. லோகேஷ் – ரஜினியின் ‘கூலி’, ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் NTR-ன் ‘வார் 2’ ஆகிய படங்கள் இன்று தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளன.
*JSK – Janaki V vs State of Kerala: Zee5
*Earth (English): Jio Hotstar
*Constable Kanakam (Telugu): etv WIN
*Tehran (Hindi): Zee5
*Dog Man (English): Jio Hotstar
News August 14, 2025
கைது செய்தவுடன் பொன் வசந்த்துக்கு நெஞ்சுவலி

பல கோடி ரூபாய் சொத்து வரி முறைகேட்டில் மதுரை மேயர் <<17390297>>இந்திராணியின் <<>>கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து மதுரைக்கு அழைத்து சென்றபோது, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே போலீசார் அவரை ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த தகவல் அறிந்தவுடனே கணவரை பார்க்க மேயர் இந்திராணி சென்றுவிட்டார். இதனால், அவர் நேற்று ராஜினாமா செய்யவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.