News April 26, 2024
வாக்குப்பதிவு: 3 மணி நிலவரம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது. அதில், பிற்பகல் மணி நிலவரப்படி கேரளாவில் 52 சதவீத வாக்குகளும், கர்நாடகாவில் 51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சத்தீஸ்கரில் 63.92%, ஜம்மு & காஷ்மீரில் 57.76% என வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. வெயிலின் தாக்கத்தால் இந்த ஆண்டு வாக்குப்பதிவு சற்று மந்தமாகவே உள்ளது.
Similar News
News November 14, 2025
அமைச்சருக்கு எதிரான அவதூறு வழக்கு வாபஸ்

தெலங்கானா முன்னாள் CM மகன் KTR-ஐயும், நடிகை சமந்தாவையும் இணைத்து, அம்மாநிலத்தின் தற்போதைய அமைச்சர் கொண்டா சுரேகா 2024-ல் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தங்களது குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, நடிகர் <<14263995>>நாகர்ஜூனா<<>> அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில், சுரேகா பொதுவெளியில் மன்னிப்பு கோரியதை அடுத்து, நாகர்ஜுனா தற்போது வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.
News November 14, 2025
சீனாவுக்கு செக் வைக்க எல்லையில் விமானப்படை தளம்

சீனாவிற்கு செக் வைக்கும் விதமாக, சர்வதேச எல்லைக்கோட்டில் இருந்து 35 கி.மீ., தொலைவில், நியோமோ என்ற இந்திய விமானப்படை தளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 13,700 அடி உயரத்தில், லடாக்கில் கட்டப்பட்டுள்ள உலகின் உயரமான விமானப்படை தளம் இதுவாகும். 2.7 கி.மீ., நீளமுள்ள இதன் ஓடுபாதையில் விமானங்கள் எளிதாக தரையிறங்க முடியும். இதன்மூலம், படைகள், ராணுவ தளவாடங்கள், விரைவாக குவிக்க முடியும்.
News November 14, 2025
41 பேரை கொன்றவன் தலைவனா? யுகபாரதி

திமுக சார்பில் சென்னையில் அறிவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் பேசிய பாடலாசிரியர் யுகபாரதி, தெருவில் கூட்டத்தை கூட்டி 41 பேரை கொன்றவன் தலைவனா என விஜய்யை மறைமுகமாக சாடினார். 1950-களில் அண்ணா கூட்டம் நடத்திய போது, பணம் வசூல் செய்து கூட்டத்தை நடத்திய கிட்டப்பாவிற்கு மேடையில் இடம் கிடைக்கவில்லை. அதை புரிந்து கொண்ட அண்ணா, அவரை MLA ஆக்கினார், அவர் தான் தலைவர் என்றும் யுகபாரதி கூறினார்.


