News November 30, 2025
டோலிவுட் இயக்குநர்களுடன் கைகோர்க்கிறாரா சூர்யா?

சூர்யாவின் படங்கள், தியேட்டர்களில் வெற்றியை ருசித்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டது என்றே கூறலாம். இதனால் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்துகிறாராம். இந்நிலையில், தெலுங்கு இயக்குநர்கள் விவேக் ஆத்ரேயா (Suryas Satuday), புச்சி பாபு சனா (Uppenna) ஆகியோரின் கதைக்கு சூர்யா ஓகே சொல்லியுள்ளாராம். இதனால் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்த பிறகு, இவர்களது படங்களில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 3, 2025
BREAKING: இந்தியா பேட்டிங்

ராய்ப்பூரில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான 2-வது ODI-யில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா பிளேயிங் XI: ரோஹித், ஜெய்ஸ்வால், கோலி, KL ராகுல், ருதுராஜ், ஜடேஜா, சுந்தர், குல்தீப், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா. முதல் போட்டியை போலவே 2-வது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றுமா இந்தியா?
News December 3, 2025
வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ₹67,004 கோடி!

கடந்த 10 ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் இல்லாத வங்கி கணக்குகளில் சுமார் ₹67,004 கோடி கேட்பாரற்ற முறையில் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக SBI வங்கியில் மட்டும் ₹19,330 கோடி உள்ளதாம். மேலும், ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ₹10,297 கோடி உரிமையாளர்களுக்கு திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாம்.
News December 3, 2025
11 ஆண்டுகளுக்கு முன் நடந்த மர்மத்துக்கு பதில் கிடைக்குமா?

2014-ல் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள், 12 ஊழியர்களுடன் சென்ற MH370 விமானம் மாயமானது. அதில் பயணித்தவர்களின் நிலையும் தெரியாததால், தேடுதல் பணி தீவிரமாக நடந்தது. ஆனால் விமானம் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்பதால் 2017-ல் தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், விமானத்தை மீண்டும் தேட மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது. டிச.30-ல் தொடங்கும் இப்பணி, 55 நாள்களுக்கு நடக்கவுள்ளது.


