News April 26, 2024
இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம்

தெலுங்கானாவில் காங்கிரஸ் & பி.ஆர்.எஸ் கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தடாலடியாகக் கூறியுள்ளார். அத்துடன் அந்த இட ஒதுக்கீட்டை எஸ்.சி, எஸ்.டி & ஓ.பி.சிகளுக்கு வழங்குவோம் என்றும் அவர் அறிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தொடர்ந்து பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
Similar News
News March 12, 2026
அரியலூர்: துணை முதல்வருக்கு செங்கோல் வழங்கல்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் கருணாநிதி மற்றும் அண்ணா சிலையை திறந்து வைத்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தமிழக போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் வெள்ளி செங்கோல் வழங்கினார். இந்நிகழச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
News March 12, 2026
விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தின் எதிரொலியால் விமானக் கட்டணம் ₹16,000 வரை அதிகரிக்க உள்ளது. இந்தியாவிலிருந்து சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கான கட்டண உயர்வு வரும் 18-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என அரசு கூறியுள்ள போதிலும் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
+2 மாணவி வன்கொடுமை.. கனிமொழி கொடுத்த ரியாக்சன்!

தூத்துக்குடியில் பள்ளி <<19356260>>மாணவி பாலியல் வன்கொடுமை<<>> செய்து கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிப்பதாக கனிமொழி கூறியுள்ளார். மேலும், இந்தச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் எனவும் கூறியுள்ளார். இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற +2 மாணவிக்கு நேர்ந்த கொடூரம் TN-ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


