News April 26, 2024
பயணிகளின் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்!

அரசுப்பேருந்தில் இருந்து இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்த சம்பவம் தமிழக பேருந்துகளின் நிலையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.15 ஆண்டுகளுக்கு மேலான பேருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறித் தமிழகத்தில் 1,500 பஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றின் நிலையை எளிதாக நினைக்காமல், 2 கோடிப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்புடைய பிரச்னையாகக் கருதிப் போக்குவரத்துத்துறை கவனம் செலுத்த வேண்டும்.
Similar News
News March 21, 2026
ராசி பலன்கள் (21.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 21, 2026
WhatsApp-ன் அடுத்த சூப்பர் அப்டேட்

WhatsApp-ல் போன் நம்பர்களுக்கு பதிலாக பயனர் பெயர்களுடன் தனித்துவமான ஐடிகளை மெட்டா அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த அப்டேட் வரும் ஜூனில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், போன் நம்பர்களை வெளிப்படுத்தாமல் புதிய நண்பர்கள் மற்றும் குரூப்பில் நீங்கள் இணையலாம். போன் நம்பர்களை தொடர்ந்து பயன்படுத்த விரும்புவோர், தனியுரிமை அம்சத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 21, 2026
வருமான சான்றிதழ் வீட்டில் இருந்தே ஈசியா வாங்கலாம்!

அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் உதவித் தொகை பெற, மானியங்கள், கடன் பெற வருமான சான்றிதழ் அவசியம். அதை Tnega என்ற அரசின் இணையதள பக்கத்தில் ஈசியாக வாங்கலாம். Login செய்து, வருமான சான்றிதழ் விண்ணப்பம் என்ற பிரிவுக்கு செல்லவும்; தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினால், 4 நாள்களில் சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


