News April 26, 2024

சேலம்: இபிஎஸ் திறந்து வைத்த நீர், மோர் பந்தல்

image

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில், அதிமுக சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், இன்று(ஏப்.26) சூரமங்கலம் பகுதியில் நீர், மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 23, 2025

நரம்புத்தளர்ச்சியை குணமாக்கும் சேலம் கோயில்!

image

சேலம் மாவட்டம், சேலத்தில் பிரசித்தி பெற்ற அழகிரிநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு, திருமண தோஷம் உள்ளவர்கள் ஆண்டாள் திருக்கல்யாணத்தை கண்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. புத்திர பாக்கியம் வேண்டி பொன்ன மரத்தின் அடியிலுள்ள சந்தான கோபாலகிருஷ்ணரை பிரார்த்தனை செய்கின்றனர். இத்தல இறைவனை வேண்டிக்கொள்ள நரம்புத்தளர்ச்சி நோய்கள் நீங்குமாம். SHARE பண்ணுங்க!

News August 23, 2025

சேலம்: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

image

சேலம் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 23, 2025

சேலம் விமான பயணிகளின் கவனத்திற்கு!

image

சேலம் மாவட்டம், காமலாபுரம் சேலம் விமான நிலையத்தில் இருந்து கொச்சின், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் இன்று (ஆக.23) இயக்கப்படவிருந்த அலையன்ஸ் ஏர் விமான சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனை சேலம் விமான நிலையம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

error: Content is protected !!