News April 26, 2024
மதுபோதையில் தகராறு செய்த மகனைக் கொன்ற பெற்றோர்

மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனைக் கட்டையால் அடித்துக் கொன்று வீட்டுக்கு பின்புறம் வீசிய பெற்றோர் கைது செய்யப்பட்டனர். வெங்கடேஷ் பிரசாத் என்பவர் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். ஆத்திரமடைந்த பெற்றோரும், சகோதரரும் அடித்துக் கொலை செய்து, விவசாய நிலத்தில் சடலத்தை வீசியுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார் மூவரையும் கைது செய்தனர்.
Similar News
News February 13, 2026
ஜோதிடரின் பேச்சை கேட்டு தாயை கொலை செய்த பெண்!

ஜோதிடரின் பேச்சை நம்பிய பெண் ஒருவர் தாயை கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. சுசித்ரா(33) என்பவரின் தந்தை 18 மாதங்களுக்கு முன் மரணமடைந்துள்ளார். ஜோதிடர் ஒருவர் தாயாரே சூனியம் வைத்து தந்தையை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதை நம்பிய சுசித்ரா, தாயார் தூங்கி கொண்டிருந்த போது தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் உண்மை வெளிவந்துவிட்டது.
News February 13, 2026
கூட்டணி கட்சிக்கு எதிராகவே கருத்து சொன்ன வைகோ

கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கருத்தை சொல்லி வருவதாக வைகோ கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு, அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பது அவரவர் உரிமை என்ற அவர், ஆனால் தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும்போது காங்கிரஸின் இந்த கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது, ஏற்கப்படாது என்றார். மேலும், மதிமுக இதுபோல எவ்வித நிபந்தனையும் விதித்ததில்லை என தெரிவித்துள்ளார்.
News February 13, 2026
வெறும் நாணயங்கள் அல்ல.. நினைவுகள்!

மேலே உள்ள போட்டோவில் இருப்பவை, ₹2 காசு முதல் ₹25 காசு வரையிலான நாணயங்கள் ஆகும். இவையெல்லாம், இப்போது புழக்கத்தில் இல்லை என்றாலும், 1990ல் பிறந்தவர்களின் மறக்க முடியாத நினைவுகள். கமர்க்கட்டு, விரலில் மாட்டிக் கொள்ளும் சுத்து மிட்டாய், தேன் மிட்டாய், பட்டாணி என அப்போதெல்லாம் சுவைத்தவை நினைவிற்கு வந்து போகிறது. நீங்கள் குழந்தையாக இருந்தபோது இந்த நாணயங்கள் இருந்ததா? உங்கள் நினைவுகளை சொல்லுங்க.


