News April 26, 2024
திண்டல் முருகன் கோவிலில் ராஜகோபுரம்

ஈரோடு, திண்டல் மலையில் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி, ராஜகோபுரம் அமைக்கும் பணியை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் மதிப்பு ரூ.2.11 கோடி ஆகும். இந்நிலையில், 5 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது.
Similar News
News March 8, 2026
ஈரோடு: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 8, 2026
பெருந்துறையில் களமிறங்கும் இபிஎஸ்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் இதுவரை 190 தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி காஞ்சிகோவில் ரோட்டில் அவர் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து, நாளை மாலை 5.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் பவானியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
News March 8, 2026
ஈரோடு அருகே பயங்கர விபத்து!

ஈரோட்டில் பிளஸ்-1 படித்து வந்த மாணவர் சர்வின், தனது நண்பர் ஜெயன் என்பவருடன் பின்னால் அமர்ந்து சென்றபோது, வில்லரசம்பட்டி பிரிவு அருகே எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியது. இந்த விபத்தில் சர்வின் உயிரிழந்தார். ஸ்ரீஜெயன் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்


