News April 26, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் அதிக நேரம் வெளியே செல்ல வேண்டாம். தாகத்தை குறைக்க குடிநீர் மற்றும் பழச்சாறுகள் முழுமையாக அதிகம் உட்கொள்ள வேண்டும். மேலும் கர்ப்பிணி தாய்மார்கள் வெளியே வராமல் இருப்பது மிகவும் நல்லது. இளநீர் அதிகம் பருக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News August 25, 2025
க.குறிச்சி: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04151-294600) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 25, 2025
திருக்கோவிலூர் வருகை தரும் அமைச்சர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பு அருகில் நாளை (26-08-2025) மாலை 5 மணியளவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட சார்பில் மு.எம்.பி பொன்.கௌதம் சிகாமணி தலைமையில் அண்ணா அறிவகம் (District பிரிவால்) அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும் இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சரும் மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான க.பொன்முடி கலந்து கொள்ள உள்ளார்.
News August 25, 2025
கள்ளக்குறிச்சி: விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாகவும், தனிநபர் தங்கள் குறைகள் குறித்தும் மனுக்கள் அளித்து பயன்படலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.