News November 29, 2025
வேலூர்: டிட்வா புயல்; இடி, மின்னலுடன் மழை!

டிட்வா புயல் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழையா என கமெண்டில் சொல்லிட்டு போங்க.
Similar News
News December 3, 2025
வேலூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது படி, வேலூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணுக்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 3, 2025
வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!
News December 3, 2025
வேலூர்: வரதட்சணை சித்திரவதை – இளம்பெண் திடீர் சாவு

பள்ளிகொண்டா அடுத்த வல்லாண்டராமம் பனங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதன். இவரது மனைவி கோகுலா(20). கோகுலா சீர்வரிசை கொண்டு வரவில்லை எனக்கூறி மதன், அவரது குடும்பத்தினர் கோகுலாவை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட கோகுலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


