News November 29, 2025
BREAKING: நாகப்பட்டினத்தை நெருங்கிய டிட்வா புயல்!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாராண்யத்தை டிட்வா புயலின் மையப்பகுதி நெருங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேதாராண்யத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
நாகை: மானியத்துடன் கூடிய கடனுதவி – ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்துதல் உதவிகள் வழங்கப்படும். வியாபாரம், சேவை, உற்பத்தி தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். மக்கும் பொருட்கள், விவசாய கழிவுப் பொருட்கள், அணிகலன்கள், மெஹந்தி தயாரிப்பு போன்ற மேலும் பல தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

நாகை: மரம் விழுந்து வீடு சேதம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பெருநாட்டான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் விவசாயி. இவரது கூரை வீட்டின் மேல் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் அருகே இருந்த புளிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில் குடிசை வீடு முழுவதும் சேதமடைந்துள்ளது. என சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டுமென அக்குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.