News April 26, 2024

தஞ்சை: 15க்கும் மேற்பட்டோருக்கு பாராட்டு விழா!

image

ஏப்.23ம் தேதி சேதுபாவாசத்திரம் கடற்பகுதியை சேர்ந்த முருகேசன், ஹரிஹரன், பாலசிங்கம் ஆகியோர் தங்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை உயிருடன் மீட்டு கடலில் விட்டனர். இந்நிலையில் அரிய வகை உயிரினங்களை பாதுகாத்த இந்த 3 பேர் உட்பட 15க்கும் மேற்பட்டோருக்கு, மே.28ம் தேதி கடல் பசு தினத்தில் பாராட்டு விழா நடத்தி ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படும் என வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 26, 2025

தஞ்சாவூர்: கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

image

கடந்த 2022ம் வருடம் கும்பகோணம் மினி பேருந்து நிற்கும் இடத்தில் நடந்த தகராறில், மாதுளம் பேட்டையைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை, தினதயாளன் என்பவர் கொலை செய்தார். இந்த வழக்கில் கும்பகோணம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், மாவட்ட கூடுதல் நீதிபதி, தீனதயாளனுக்கு 5 வருட சிறைதண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

News September 26, 2025

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் எச்சரிக்கை

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் வெளியீட்டுள்ள செய்தி‌ குறிப்பில், வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அல்லாத நபர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள், பருவ கால பணியாளர்கள், கொள்முதல் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News September 26, 2025

தஞ்சை: Gas Cylinder-க்கு அதிக பணம் கொடுக்காதீங்க!

image

தஞ்சை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!