News April 26, 2024

அறுவடை பணிகள் தீவிரம்

image

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி (ம) அதை சுற்றியுள்ள கிராமங்களில் சம்பா அறுவடைக்கு பின்னர் கோடையில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், விதைப்பு செய்யப்பட்ட தர்ப்பூசணி, 60 – 65 நாட்கள் ஆன நிலையில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பழங்களுக்கு தற்போது நல்ல விலை கிடைத்தாலும் மகசூல் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 20, 2024

திருவள்ளூரில் வேலை வாய்ப்பு முகாம்

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலக வளாகத்தில் வரும் நவ.22ம் தேதி காலை10 மணி யளவில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News November 19, 2024

இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 19, 2024

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருமுல்லைவாயல் மகளிர் தொழில் பூங்காவில் புதிதாக தொழில் தொடங்க தொழிற்மனைகளை விரும்புவோர் http://www.tansidco.tn.gov.in வாங்க இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலிமனைகள் இணையதளத்தின் வாயிலாகவே விவரங்களை தெரிந்து கொண்டு தேவையானவற்றை நவ.22-ம் தேதிக்குள்   விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு.