News November 29, 2025
பாலிவுட்டிலும் வசூல் வேட்டையை தொடங்கிய தனுஷ்

தனுஷின் ‘Tere Ishq Mein’ படம், கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில், முதல் நாளிலேயே ₹15.06 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய பாலிவுட் படங்களில் வரிசையில் இந்த படமும் இடம்பிடித்துள்ளது. இந்த ஆண்டில் தமிழில் இட்லி கடை, தெலுங்கில் குபேரா ஆகிய படங்களை தொடர்ந்து, தற்போது ஹிந்தியிலும் தனுஷ் இந்த படத்தின் மூலம் தனது வசூல் வேட்டையை தொடங்கியுள்ளார்.
Similar News
News December 1, 2025
BREAKING: சென்னை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் 10 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று(டிச.1) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 1, 2025
2-வது திருமணம் செய்த தமிழ் நடிகைகள்(PHOTOS)

சினிமா பிரபலங்களில் சிலர் வெற்றிகரமான காதல் கதைகளைக் கொண்டிருந்தாலும், சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்களை கடந்து வந்துள்ளனர். திரைப்படங்களை கடந்து அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையின் பாதையை அவர்களே வடிவமைத்துள்ளனர். அவர்கள் யாரென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க
News December 1, 2025
இபிஎஸ்ஸை மீண்டும் அட்டாக் செய்த செங்கோட்டையன்!

EPS பெரிய தலைவர் இல்லை எனவும் அவரது கருத்துக்கு பதிலளிப்பது தேவையற்றது என்றும் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். ஏற்கெனவே EPS-க்கு தலைமை பண்பு இல்லை என கூறி வந்த நிலையில், தற்போது அவர் பெரிய தலைவர் இல்லை என சாடியுள்ளார். நேற்று கோபியில் பேசிய EPS, செங்கோட்டையன் <<18433060>>3 ஆண்டுகளாக அதிமுகவிலிருந்தபடி<<>> கட்சிக்கு துரோகம் செய்தார் எனவும், வரும் தேர்தலில் அவர் தோற்பது உறுதி என்றும் EPS எச்சரிதிருந்தார்.


