News April 26, 2024
பிசிசிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளச்சந்தையில் IPL டிக்கெட் விற்பதைத் தடுக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக, ஆன்லைனில் விற்கப்படும் IPL டிக்கெட்டுகள், சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்து விடும். அதனை வாங்க முடிந்தவர்கள், 10 மடங்கு அதிக விலைக்கு மற்றவர்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் சாதாரண ரசிகர்களால் போட்டியை காண முடியாத சூழல் உருவாகிறது என்பதே பலருடைய குற்றச்சாட்டு.
Similar News
News February 5, 2026
பிறந்த குழந்தைக்கு எப்போது TV காட்டணும் தெரியுமா?

பிறந்து 6 மாதங்களே ஆன குழந்தைகளுக்கு கூட தற்போது TV-ல் ’உருளக்கிழங்கு செல்லக்குட்டி’ என ரைம்ஸ் காட்ட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் உங்கள் குழந்தைக்கு 18 மாதங்கள் ஆன பிறகே TV பார்க்க அனுமதிக்கவேண்டும் என அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் கூறியுள்ளது. அதிலும் கூட கண்கள், மூளைத்திறனை பாதிக்கும் என்பதால் Bright Colours கொண்ட கார்டூன்களை அவர்களுக்கு காட்டக்கூடாது என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
News February 5, 2026
பாகிஸ்தானுடன் விளையாட தயார்: சூர்யகுமார் யாதவ்

டி20 WC-ல் பாக்., உடன் விளையாட மாட்டோம் என நாங்கள் கூறவில்லை, அவர்கள் தான் கூறினார்கள் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். பிப்.15 அன்று நடைபெறவிருந்த இந்தியா உடனான போட்டியை புறக்கணிப்பதாக பாக்., அறிவித்திருந்த நிலையில், ICC அட்டவணைப்படி கொழும்பு செல்வதற்கான விமான டிக்கெட்கள் புக் செய்யப்பட்டுவிட்டதாகவும், பாக்., உடன் விளையாடத் தயார் என்றும் சூர்யகுமார் கூறியுள்ளார். INDvsPAK போட்டி நடக்குமா?
News February 5, 2026
நடிகை பத்மா காலமானார்.. கடைசி PHOTO

மார்பக புற்றுநோய் பாதிப்பால் நீண்ட காலமாக போராடிவந்த சீரியல் <<19055765>>நடிகை வாஹினி (எ) பத்மா<<>>, பூவுலகில் இருந்து விடைபெற்றார். அவரது இறுதி காலம் மகிழ்ச்சியாக அமையவில்லை. சிகிச்சைக்கு பணமில்லாததால் புற்றுநோயைவிட வறுமையே பத்மாவை அதிகம் வாட்டியது. சக நடிகர்கள் நிதி திரட்டி உதவி செய்து வந்தனர். எனினும், புற்றுநோய் உடனான போரில், பத்மா தோற்றுப் போனது சோகமே! மேலே ஸ்வைப் செய்து, அவரது கடைசி போட்டோவை பாருங்க.


