News April 26, 2024
தூத்துக்குடியில் கடும் எச்சரிக்கை

தற்போது மாம்பழ சீசன் என்பதால் விற்பனை அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ரசாயன கற்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு கடைகளில் விற்பனை செய்யப்படும் மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்படுவதோடு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
ஆவணம் இல்லாத விதை விற்பனை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விதை விற்பனை நிலையங்களில் நெல் பருத்தி காய்கறி தர்பூசணி போன்ற விதைகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை இருப்பு விற்பனை பதிவேடு விதை முளைப்புத்திறன் போன்ற ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும். இவை இல்லாமல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News March 8, 2026
தூத்துக்குடி மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு….!

தூத்துக்குடி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News March 8, 2026
தூத்துக்குடியில் ஒருவர் குத்தி கொலை

தூத்துக்குடி ஆதிபராசக்தி நகர் காட்டு பகுதியில் லாரி ஷெட் உரிமையாளர் ஆறுமுகம்(52) கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தகவலின் பேரில் சென்ற சிப்காட் போலீஸார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், உறவினருடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான உறவினரை தேடி வருகின்றனர்.


