News April 26, 2024

ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் விஷால்

image

திருச்சி, தஞ்சை திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களை, நடிகர் விஷால் காட்டமாக விமர்சித்துள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், தனது ‘ரத்னம்’ படத்தை வெளியிட முடியாமல் இருப்பது உங்கள் அனைவருக்கும் வெட்கக்கேடு என்றும், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், படத்தை வெளியிட விடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Similar News

News November 14, 2025

டெல்லி தாக்குதல் JeM சதி வேலையா?

image

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம், புல்வாமா தாக்குதலுக்கு காரணமாக ஜெய்ஷ் – இ – முகமது (JeM) அமைப்பின் சதி வேலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமீபத்தில் கைது செய்யப்பட்ட <<18258367>>டாக்டர் ஷஹீன் சயீத்<<>>, JeM தளபதி உமர் ஃபரூக்கின் மனைவி அஃபிரா பிபியுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அஃபிரா, JeM அமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பெண்கள் பிரிவின் முக்கிய நபர் ஆவார்.

News November 14, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 14, ஐப்பசி 28 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:30 AM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: தசமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: உத்திராடம் ▶சிறப்பு: சுக்கிரன் வழிபாட்டு நாள். ▶வழிபாடு: அபிராமி அந்தாதி பாடி அம்மனை வழிபடுதல்.

News November 14, 2025

காதல் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டது: அஜய் தேவ்கன்

image

இன்றைய இளம் தலைமுறையினர் எதற்கெடுத்தாலும் ‘LOVE’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதாக நடிகர் அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார். இதனால், காதல் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டதாகவும், காதலின் உண்மையான அர்த்தம், அந்த சொல்லின் ஆழம் இளம் தலைமுறையினருக்கு புரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, அவரது மனைவி <<18272316>>கஜோல்<<>>, திருமணத்திற்கு Expiray Date மற்றும் Renewal ஆப்ஷன் வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

error: Content is protected !!