News April 26, 2024
பூரன்தான் அபாயகரமான வீரர்

கிரிக்கெட்டை பொறுத்தவரை LSG அணியைச் சேர்ந்த நிக்கோலஸ் பூரன்தான் அபாயகரமான வீரர் என்று CSK முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “டி20 போட்டியில் பூரனால் வேகப்பந்து & சுழற்பந்து வீச்சு என எந்த வகையான பந்துவீச்சுக்கு எதிராகவும் அதிரடியாக விளையாட முடியும். பூரனை எப்படி பயன்படுத்தினால் நல்லதோ அந்த வகையில் LSG அணி பயன்படுத்தி வருகிறது” எனத் தெரிவித்தார்.
Similar News
News April 10, 2026
பாகிஸ்தானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில் லெபனானில் இஸ்ரேல் இனப்படுகொலை நிகழ்த்துவதாக பாக்., பாதுகாப்பு அமைச்சர் ஆசிஃப் விமர்சித்திருந்தார். மேலும் இஸ்ரேல் ஒரு தீய சக்தி மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான கேன்சர் எனவும் சாடியிருந்தார். இந்நிலையில் மத்தியஸ்தம் செய்வதாக கூறிக்கொள்ளும் ஒரு நாடு இப்படி அப்பட்டமாக யூத விரோத கருத்துகளை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது என இஸ்ரேல் அரசு எச்சரித்துள்ளது.
News April 10, 2026
விஜய்க்காக கோபத்தில் கொந்தளித்த தயாரிப்பாளர்

ஜன நாயகன் படத்தின் கிளைமாக்ஸ் உள்ளிட்ட பல காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார். இதற்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும், இச்செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. விஜய்யின் இந்த புதிய படத்தை நீங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் குறிவைத்துத் தாக்குவீர்கள் என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 10, 2026
ஜீரோ பாஜக இயக்கத்தில் நிர்மலா சீதாராமன் கணவர்

தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக ’ஜீரோ பாஜக’ என்ற இயக்கம் TN-ல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய நிர்வாகிகளாக Ex நீதிபதி அரி பரந்தாமன், மனோ தங்கராஜ் ஆகியோருடன் FM நிர்மலா சீதாராமனின் கணவர் பரகால பிரபாகரும் இடம்பெற்றுள்ளார். TN-ல் பாஜக 27 இடங்களில் போட்டியிடும் நிலையில், சட்டமன்றத்தில் பாஜக MLA-க்கள் நுழைவதை தடுப்பதற்காக தொடங்கியுள்ள இந்த இயக்கம் கவனம் பெற்றுள்ளது.


