News April 26, 2024
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சிக்கல்

மதுரை காமராஜ் பல்கலையில் பிஎச். டி, வாய்மொழித் தேர்வு (வைவா ) முடித்தும், சிண்டிகேட் ஒப்புதல் கிடைக்காததால் 190 Ph.D மாணவர்கள், உதவிப் பேராசிரியர்கள் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் உள்ளனர். தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 4000க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. UGC வழிகாட்டுதல்படி இப்பணிக்கு Ph.D அவசியம்.
Similar News
News April 21, 2025
நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர் கொடூர கொலை

மதுரை உலகனேரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அபினேஷ் (வயது 27)நேற்று இரவு வீட்டின் முன்பாக நின்றுகொண்டிருந்த போது மதுபோதையில் அங்குவந்த சிலர் அபினேசுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அக்கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முகம் மற்றும் உடலில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது.ரத்தவெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த அபினேஷ் உயிரிழந்தார். உடலை மீட்டு கொலையாளிகளை போலீசார் தேடுகின்றனர்.
News April 21, 2025
மதுரையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மதுரையில் ஏப்.29 அன்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து , மே.8 திருக்கல்யாணம், மே.9 தேரோட்டம், மே.10 கள்ளழகர் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளகழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே.12 இல் நடைபெற உள்ளதால் அன்று மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.உங்க ஊர் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News April 21, 2025
இளைஞர் கதையை முடித்த மாஜி ஏட்டு

மதுரை, ஆனையூர், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன், திருச்சியில் ஏட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டுக்கு அருகே குடியிருந்தவர் அழகுபாண்டி, கட்டட தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் ஒன்றாக மது குடிப்பது வழக்கம்.நேற்று, போதையிலிருந்த இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு நடராஜன், வீட்டிற்குள் புகுந்து, அழகுபாண்டியை அரிவாளால் வெட்டினார். அந்த இடத்திலேயே அவர் பலியானார்.