News April 26, 2024
12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54 அடியாக சரிந்திருப்பதால், சேலம், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நீர்மட்டம் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 102 அடியாக இருந்தநிலையில், தற்போது 54.32 அடியாக குறைந்துள்ளது. இதனால் ஜலகண்டேஸ்வரர் கோயில், நந்தி சிலை வெளியே தெரிகின்றன. பருவமழை முன்கூட்டி தொடங்கினால் மட்டுமே தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய இயலும்.
Similar News
News November 14, 2025
Sports Roundup: பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி

*8 அணிகள் பங்கேற்கும் ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடங்குகிறது. *குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷெர்பேன் ரூதர்போர்ட் 2.6 கோடிக்கு MI அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். *Bondi ஓபன் ஸ்குவாஷில் ரதிகா சீலன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். *உலகக் கோப்பை செஸ் 4-வது ரவுண்டில் பிரக்ஞானந்தா தோல்வி. *ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப், மகளிர் காம்பவுண்ட் பிரிவில் ஜோதி சுரேகா தங்கம் வென்றார்.
News November 14, 2025
Cinema 360°: ‘கும்கி 2’ படத்திற்கு U சான்று

*’கும்கி 2′ படத்திற்கு U சான்றிதழ் தரப்பட்டுள்ளது. *விதார்த்தின் ‘மருதம்’ சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. *தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிப்பு. *பிரபாஸின் Spirit ஷூட்டிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என அறிவிப்பு. *மம்மூட்டியின் ‘களம்காவல்’ டிரெய்லர் வெளியாகியுள்ளது.
News November 14, 2025
ஐபிஎல் வீரர்கள் ஏலம்.. எப்போது தெரியுமா?

2026 IPL சீசனுக்கான வீரர்கள் ஏலம், வரும் டிச.16-ம் தேதி அபுதாபியில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை மினி ஏலம் என்பதால், ஒரே நாளில் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. தக்கவைத்த வீரர்களின் விவரம் இன்னும் 2 நாள்களில் வெளியான பிறகு, ஏலத்தில் பங்கேற்க வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். வீரர்கள் விடுவிப்பு தொகையுடன் கூடுதலாக ₹5 கோடி வரை ஒவ்வொரு அணியும் ஏலத்தில் செலவு செய்யலாம்.


