News April 26, 2024
ஆபரணத் தங்கத்தின் விலை ₹360 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 அதிகரித்து ₹54,040க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,755க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹88க்கும், கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹88,000க்கும் விற்பனையாகிறது.
Similar News
News January 25, 2026
படுக்கையறையை பராமரியுங்கள்… மகிழ்ச்சி கூடும்

வரவேற்பறை மற்றும் வீட்டின் பிற அறைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படுக்கையறைக்கு நாம் கொடுப்பதில்லை. இதனால் தூக்கத்தின் தரம் கெடுகிறது, மன அழுத்தம் அதிகரிக்கிறது, பல நோய்களும் கூட ஏற்பட காரணமாகிறது. படுக்கை அறையை சரியாக பராமரித்தால், உங்கள் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். தாம்பத்ய வாழ்க்கையும் கூட மேம்படும் என்கின்றனர் மனநல டாக்டர்கள்.
News January 25, 2026
ஆண்களுக்கும் இந்த பீரியட்ஸ் பிரச்னை வருமா?

பெண்களுக்கு மாதவிடாய் போன்று, ஆண்களுக்கும் மாதந்தோறும் IMS (Irritable Male Syndrome) என்ற ஹார்மோன் பிரச்னை ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். 30 வயதை கடந்த நபர்களுக்கு இது பொதுவானதாக காணப்படுவதாக சொல்லப்படுகிறது. IMS-ன் போது, ஆண்கள் யாருடனும் அதிகம் பேச மாட்டார்களாம். எதற்கெடுத்தாலும் எரிச்சல், காரணமே இல்லாமல் கோபப்படுவதும் நடக்குமாம். நீங்களும் இதை ஃபீல் பண்ணியிருக்கீங்களா? கமெண்ட் பண்ணுங்க.
News January 25, 2026
ஆகப்பெரும் ஊழல்வாதி விஜய்: அதிமுக

விஜய்யின் விமர்சனத்திற்கு ‘பனையூர் பண்ணையார்’ என தலைப்பிட்டு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. சட்டவிரோதமாக தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என அதிமுக சாடியுள்ளது. மேலும், அன்றைய CM (ஜெ.,) வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி விஜய் காத்திருந்ததாகவும், கரூரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் (விஜய்) ஒரு காரணம்தானே எனவும் கடுமையாக விமர்சித்துள்ளது.


