News November 28, 2025
பராசக்தி பட நடிகை காலமானார்

‘ஓ ரசிக்கும் சீமானே, ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ உள்ளிட்ட பாடல்களை கேட்காதவர்களும், குமாரி கமலாவின்(91) ஆட்டத்தை ரசிக்காதவர்களும் இருக்க முடியாது. 70 ஆண்டுகளுக்கு முன்பே PAN INDIA ஸ்டாராக திகழ்ந்த அவர், பராசக்தி, பாவை விளக்கு உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது நடனத்தால் பல மொழிகளில் ரசிகர்களை சம்பாதித்த கமலா, இறுதி காலத்தை அமெரிக்காவில் கழித்த நிலையில் வயது மூப்பால் காலமானார்.
Similar News
News December 6, 2025
தமிழகம் முழுவதும் நாளை வெடிக்கிறது போராட்டம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மேல்முறையீடு என்ற பெயரில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். தீபம் ஏற்ற அனுமதியளித்திருக்க வேண்டும். ஆனால், சிறுபான்மையினர் ஓட்டுக்காக அனுமதியளிக்கவில்லை. இதை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை (டிச.7) போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
News December 6, 2025
பக்தியை வைத்து பகை வளர்க்க கூடாது: சேகர்பாபு

பக்தியை வைத்து பகை வளர்க்க கூடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றிய பின், மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் ஏற்க முடியுமா? அதுபோல, திருப்பரங்குன்றத்தில் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சியின்போதும், தீபம் ஏற்றக்கூடாது என்றே அவர்கள் தெரிவித்து வந்ததாக விமர்சித்தார்.
News December 6, 2025
ரயிலில் உள்ள 5 இலக்க எண் எதை குறிக்கிறது தெரியுமா?

ரயில் பெட்டியின் 5 எண்களில், முதல் 2 எண்கள் ரயில் உருவான ஆண்டை குறிக்கிறது. கடைசி 3 எண்கள், கோச்சை குறிக்கிறது. 001-200: AC கோச், 201-400: 2nd Sleeper, 401-600: ஜெனரல், 601-700: Second Sitting, 701-800: லக்கேஜ், 801+: பேன்ட்ரி, ஜெனரேட்டர் கோச் ஆகும். உதாரணத்திற்கு, ‘08453’ என்றால் 2008-ல் உருவான ரயில், ஜெனரல் பெட்டி என அர்த்தம். மேலே உள்ள Photo எதை குறிக்கிறது என கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.


