News November 28, 2025
தேனி: பார்க்கிங் தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு

தேனி, அய்யனார்புரம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (46). இவரது தோட்டத்திற்கு அருகில் பாண்டி (38) என்பவர் ஆட்டோவை நிறுத்தியுள்ளார். ஆட்டோவை தள்ளி நிறுத்துமாறு பாண்டியிடம் இளையராஜா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டி இளையராஜாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இளையராக மேல் சிகிச்சைகாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸார் விசாரனை
Similar News
News November 28, 2025
தேனி: கணவர் அடித்தால் உடனே CALL பண்ணுங்க..!

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வேலைத்தளங்களில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை நடந்தால் பெண்கள் உடனடியாக 181 உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்க 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News November 28, 2025
டி.சுப்புலாபுரத்தில் நாளை இலவச மருத்துவ முகாம்

ஆண்டிபட்டி தாலுகா டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (நவ.29) காலை 10 மணி முதல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடக்கிறது. இம்முகாமில் பொது மருத்துவம், பெண்கள், குழந்தைகள் நலன், பல், கண், மன நல மருத்துவம், நுரையீரல், சர்க்கரை, நோய்களுக்கு சிகிச்சை ஆலோசனை, ரத்தம், சளி எக்கோ, அலட்ரா சோனோகிராம் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல்.
News November 28, 2025
தேனி: முந்திரி சாகுபடி செய்ய ரூ.18 ஆயிரம் மானியம்

தேனி மாவட்டத்தில் 2600 ஹெக்டர் பரப்பில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசு திட்டத்தில் 40 ஹெக்டர் பரப்பு முந்திரி சாகுபடி விரிவாக்கம் செய்ய தோட்டக்கலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஒரு ஹெக்டர்க்கு ரூ.18,000 மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்க அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என தோட்டக்கலைத் துறை தகவல் தெரிவித்துள்ளது.


