News April 26, 2024
ரயில் நிலையம் அருகே ஆண்

ஈரோடு இரயில் நிலையம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. எனவே போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
ஈரோடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News March 4, 2026
கோபி: கட்சி மாறிய காங்கிரஸ் நிர்வாகி!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் 4-வது வார்டு காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். கோபி நகரச் செயலாளர் பிரினியோ கணேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவருக்குக் கட்சித் துண்டு அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர். இது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளானது.
News March 4, 2026
ஈரோட்டில் அதிரடி மாற்றம்!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் 28 காவல் சார்பு ஆய்வாளர்களை (SI) இடமாற்றம் செய்து எஸ்.பி. சுஜாதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி பவானிசாகர், கொடுமுடி, சூரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் பணியாற்றிய அதிகாரிகள் நிர்வாக நலன் கருதி மாற்றப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்புப் பணிகளை முறைப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


