News November 28, 2025
பெரம்பலூர்: புயல் அவசர உதவி எண்கள்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், பெரம்பலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 28, 2025
பெரம்பலூர்: வங்கி வேலை அறிவிப்பு

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News November 28, 2025
பெரம்பலூர் மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது பெரம்பலூர் மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (நவ.29) சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 28, 2025
பெரம்பலூர்: SIR படிவம் நிரப்பும் பணி தீவிரம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கலம் அருகே உள்ள தொண்டப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கலான, அனுக்கூர் மற்றும் அ.குடிக்காடு ஆகிய கிராமத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, SIR படிவம் திருத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பொதுமக்கள் பலர் SIR படிவத்தை பதிவு செய்து வருகின்றனர்.


