News April 26, 2024

தோட்டக்கலை துறை அறிவிப்பு

image

தோட்டக்கலை துறை துணை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் சுமாா் 91.80 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது வோ் வாடல் நோய் பாதிப்பால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். நோயால் பாதிக்கப்பட்டு வெட்டப்பட்ட மரங்களுக்கு மறுநடவு செய்ய ஏதுவாக தென்னை நாற்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக அதிகபட்சமாக 40 நாற்றுகள் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 10, 2026

கோவை: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

image

கோவை மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.

News March 10, 2026

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: கோவை ஆட்சியர் வாழ்த்து

image

தமிழகத்தில் நாளை (மார்ச் 11) 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது. கோவையில் 509 பள்ளிகளைச் சேர்ந்த 18,861 மாணவர்கள், 19,529 மாணவிகள் என மொத்தம் 38,390 பேர் மற்றும் 1,237 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதியை, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஏற்பாடு செய்துள்ளார். மேலும் அவர் மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

கோவை: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!