News April 26, 2024

சிவகங்கை: சித்திரை திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு

image

சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவையொட்டி நேற்று(ஏப்.25) மஞ்சுவிரட்டு நடைபெற்றது. தொழுவிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. மாடுகளை காளையா்கள் பிடித்து மகிழ்ந்தனா்.

Similar News

News March 5, 2026

சிவகங்கை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

image

சிவகங்கை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546 – 255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 5, 2026

சிவகங்கை: வழுக்கி விழுந்து தலையாரி பலி.!

image

திருப்புவனம் புதூர் வன்னிகோட்டை காலனியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). இவர் வலையனேந்தல் குரூப் தலையாரியாக பணியாற்றி வந்தார். தனது வீட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 5, 2026

சிவகங்கை இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (04.03.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!