News November 28, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நவ.27 இரவு 10 மணி முதல் நாளை நவ.28 காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News November 28, 2025
புதுக்கோட்டை: அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கே.புதுப்பட்டியில் சுமார் 20 வருடங்களாக பிச்சை எடுத்து, வசித்து வந்த 85 வயது முதியவர் வயது முதிர்வு காரணமாக காமண்டி முக்கம் அருகில் இறந்த கிடந்தார். அவர் யார் எந்த ஊர் என்பது தெரியவில்லை. அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக புதுகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரைப் பற்றி தெரிந்தால் 94988100761 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என இன்ஸ்பெக்டர் தங்கம் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது புதுக்கோட்டை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 28, 2025
புதுக்கோட்டை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.28) அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!


