News April 25, 2024

பெங்களூரு அணி அபார வெற்றி

image

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற 41ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 206/7 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 207 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 171/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

Similar News

News January 24, 2026

உங்கள் மனைவியிடம் இந்த 7 அறிகுறிகள் உள்ளதா?

image

உங்க மனைவி, உங்க மீது கோபத்தில் இருப்பதை இந்த அறிகுறிகள் சொல்லிவிடும்: 1)வழக்கத்துக்கு மாறான அமைதி 2)அடிக்கடி உங்களை விமர்சிப்பது 3)அடிக்கடி எரிச்சல் / கோபம் 4)தலைவலி, தசைப்பிடிப்பு அறிகுறிகள் 5)வழக்கமாக செய்துகொண்டிருந்த விஷயங்களிலிருந்து விலகுவது 6)தாம்பத்ய உறவை தவிர்ப்பது 7)கடமைக்காக பேசுவது, இடித்துப் பேசுவது என பேச்சில் அதிருப்தி. அப்புறமென்ன, உடனே காரணத்தை கண்டறிந்து, சரிசெய்யுங்கள்!

News January 24, 2026

விஜய்க்கு திருமா எச்சரிக்கை

image

கூட்டணியை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தவெகவை NDA-வுக்குள் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் சிலர் கணிக்கின்றனர். இந்நிலையில், தங்கள் கூட்டணியில் இணைய விஜய்க்கு பாஜக அழுத்தம் தருவதாக குற்றம்சாட்டியுள்ள திருமாவளவன், நெருக்கடிக்கு பயந்து விஜய் NDA-வில் இணைந்தால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என எச்சரித்துள்ளார்.

News January 24, 2026

ஆஸி.,யை எதிர்கொள்ளும் இந்திய மகளிர் படை இதுதான்!

image

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் WPL முடிந்தவுடன், இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்நிலையில் மார்ச் 6-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கான அணியை BCCI அறிவித்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணியில், ஸ்மிருதி, ஷபாலி, ஜெமிமா, ரிச்சா, அமன்ஜோத் கவுர், உமா செத்ரி, பிரதிகா, ஹர்லீன், தீப்தி, ரேணுகா, சினே ராணா, கிராந்தி, வைஷ்ணவி, சயாலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

error: Content is protected !!