News November 27, 2025
கள்ளக்குறிச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கள்ளக்குறிச்சி, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 27, 2025
சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளை நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநாவலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்பு தீவிர திருத்தம் பணியை நேரில் ஆட்சியர் பிரசாந்த் ஆய்வு செய்தார். கணக்கீட்டு படிவங்களை சேகரித்து செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ 27)நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 27, 2025
சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம்,79-சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்புத் தீவிரத் திருத்தம்(SIR) பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.இதில் கணக்கீட்டுப் படிவங்களை சேகரித்து BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (நவ.27) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
News November 27, 2025
எஸ்.ஐ.ஆர். பணியை ஆய்வு செய்த ஆட்சியர் பிரசாந்த்!

(நவ.27) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் எஸ். ஐ.ஆர் பணி மேற்கொண்டு வரும் பகுதியில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு செய்து வருகிறார்.மேலும் பணிகள் குறித்து கேட்டறிந்து விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.இதில் அனைத்து ஊராட்சிகளிலும் ஆய்வு செய்து அறிவுரை வழங்க உத்தரவிட்டார்.


