News November 27, 2025

₹20,000 சம்பளம், ரயில்வே வேலை.. இன்றே கடைசி!

image

இந்திய ரயில்வேயில் 3,058 Ticket Clerk, Accounts Clerk காலிப் பணியிடங்கள் உள்ளன. Ticket Clerk பணிக்கு 12-வது பாஸ் செய்திருந்தால் போதும். Accounts Clerk பணிக்கு டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு ₹20,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. நவ.27-க்குள் <>www.rrbapply.gov.in<<>> இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பியுங்கள். வேலை தேடுவோருக்கு SHARE THIS.

Similar News

News November 28, 2025

விஜய் முதல்வராவது உறுதி: செங்கோட்டையன்

image

தனது மூச்சு உள்ளவரை விஜய்க்கு விசுவாசமாக இருப்பேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக ஆகிய 2 ஆட்சிகளையும் மக்கள் விரும்பவில்லை என தெரிவித்த அவர், 2026-ல் விஜய் முதல்வராவார் எனவும் கூறியுள்ளார். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக ₹500 கோடி வருவாயை தூக்கி எறிந்துவிட்டு விஜய் வந்துள்ளதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.

News November 28, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை… கலெக்டர்கள் அறிவிப்பு

image

புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை(நவ.28) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாளை சனிக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கு வழக்கம்போல் விடுமுறை என்றும், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News November 28, 2025

30-ம் தேதிக்குள் இத பண்ணுங்க.. இல்லனா பென்ஷன் வராது!

image

மத்திய அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (NPS) ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு (UPS) மாற நவம்பர் 30-ம் தேதிக்குள் (நாளைமறுநாள்) விண்ணப்பிக்க வேண்டும். அதே போல, ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற, வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், இப்பதிவை அனைத்து நண்பர்களுக்கும் உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!