News April 25, 2024
கர்நாடக மாநில தொழிலாளர்களுக்கு விடுமுறை

ஈரோடு, பெருந்துறை தாலுக்கா உட்பட்ட சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் கர்நாடக மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் நாளை நடைபெறக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு விடுமுறை வழங்கி உள்ளனர். அதேபோல பனியன் கம்பெனிகளில் வேலை செய்யக்கூடிய கர்நாடக மாநில தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
ஈரோடு மக்களே செல்போனில் இது கட்டாயம்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.
News January 28, 2026
அந்தியூர் அருகே சோகம்: ஏழு மாடுகள் பலி!

அந்தியூர் அருகே காந்திநகரைச் சேர்ந்த விவசாயி வெங்கடசாமிக்குச் சொந்தமான ஏழு மாடுகள், செடிகளுக்குப் பாய்ச்ச வைத்திருந்த யூரியா கலந்த தண்ணீரைக் குடித்ததால் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த மாடுகளின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் எனத் தெரிகிறது. கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வரும் நிலையில், வாழ்வாதாரத்தை இழந்த விவசாயக் குடும்பம் மிகுந்த சோகத்தில் உள்ளது.
News January 28, 2026
வெள்ளித்திருப்பூர் அருகே வாலிபர் விபரீத முடிவு

ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் அருகே மாத்தூரைச் சேர்ந்த பழனிச்சாமி (32), தனியார் ஆலையில் இயந்திர ஆப்பரேட்டராகப் பணிபுரிந்து வந்தார். ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட கடுமையான வயிற்று வலி காரணமாக மனமுடைந்த அவர், நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


