News November 27, 2025
புதுவை: தெலுங்கானா தொழிலாளி உயிரிழப்பு; போலீஸ் விசாரணை

தெலுங்கானாவை சேர்ந்த வெங்கடய்யா என்பவர், அதே மாநிலத்தை சேர்ந்த குன்ன வெங்கடேஷிடம் புதுவையில் ஒப்பந்த அடிப்படையில், வேலை செய்தார். வெங்கடய்யாவுக்கு, உடல்நிலை சரியில்லாததால், அவரை, தெலுங்கானாவுக்கு அனுப்ப குன்ன வெங்கடேஷ் நேற்று முன்தினம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றபோது, வெங்கடய்யாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்தார். இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
Similar News
News November 27, 2025
புதுச்சேரிக்கு நாளை முதல் ஆரஞ்சு அலர்ட்

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிக்கையின்படி, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் வரும் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை புயலாக மாறக்கூடும். இதனால் புதுச்சேரிக்கு மிக கன மற்றும் அதி தீவிர மழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
News November 27, 2025
புதுச்சேரி: 2 நாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

புதுச்சேரி பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், முத்திரையர்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இன்றும்(நவ.27), தனபாலன் நகர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் நாளையும்(நவ.28) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இங்கிருந்து குடிநீர் வினியோகம் பெறும் பகுதிகளில் குடிநீர் ரத்து செய்யப்படுபவதாக தெரிவித்தார்.
News November 27, 2025
புதுவை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 5810 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 27.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..


