News April 25, 2024
அரை சதம் விளாசினார் விராட் கோலி

SRH அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி அரை சதம் கடந்துள்ளார். தொடக்கத்தில் அதிரடியாக ஆடிவந்த அவர், பின் விக்கெட்டுகள் சரிந்ததால் சற்றுப் பொறுமையாக ஆடிவருகிறார். தற்போது கோலி 50*, கிரீன் 1* ரன்களுடன் களத்தில் உள்ளனர். SRH தரப்பில் நடராஜன், உனத்கட், மார்க்கண்டேய தலா 1 விக்கெட் வீழ்த்தினர். RCB இதே வேகத்தில் ஆடினால் இன்று 250 ரன்களை நெருங்க வாய்ப்புள்ளது.
Similar News
News April 9, 2026
வாக்குப்பதிவில் சாதனை படைத்த புதுச்சேரி.. இவ்வளவா!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86.92% வாக்குகள் பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் இதற்கு முன்னதாக 2011-ல், 86.19% வாக்குகள் பதிவானதே சாதனையாக இருந்தது. அதேசமயம் கேரளாவில் 75.01%, அசாமில் 84.42% வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கேரளா மற்றும் புதுச்சேரியில் 6 மணியுடன் நிறைவடைந்தது.
News April 9, 2026
இந்திய கிரிக்கெட் லெஜெண்ட் காலமானார்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் C.D கோபிநாத் சென்னையில் (96) காலமானார். இவர் 1951-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்த தொடரின் 5-வது டெஸ்டில் (சென்னை) தான் இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்தது. அந்த வரலாற்று சிறப்புமிக்க அணியில் எஞ்சியிருந்த கடைசி வீரர் இவர்தான். இவரது மறைவுக்கு பல கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News April 9, 2026
இதுமட்டும்தான் கோர்ட்டுக்கு வேலையா? நீதிபதிகள்

திருப்பரங்குன்றத்தில் இருமதத்தினருக்கான கட்டுப்பாடுகளில் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக கூறி KK ரமேஷ் என்பவர் HC மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், தி.குன்றம் வழக்குகளை விசாரிப்பது மட்டுமே HC-ன் வேலையா என கேள்வி எழுப்பினர். இதுபோன்று முகாந்திரம் இல்லாமல் வழக்கு தொடர்ந்ததற்காக மனுதாரருக்கு ₹50,000 அபராதம் விதித்து, மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


