News November 26, 2025
ஸ்டாலினின் பழைய பழக்கம் மாறவே இல்லை: EPS

மேற்கு மண்டலக்காரர் என்று சொல்லிக் கொள்ளும் EPS, செய்தது எல்லாம் துரோகம்தான் என CM குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், எதிர்க்கட்சியாக இருந்த போது எது நடந்தாலும், தன்னை குறை சொல்லிய பழக்கம் இன்னும் ஸ்டாலினுக்கு மாறவில்லை என EPS பதிலடி கொடுத்துள்ளார். உங்கள் பக்கம் இருந்த மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவர்களே தான் என்னென்ன செய்தேன் என சொல்லியிருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News November 28, 2025
மதுரை: மாடியிலிருந்து விழுந்து தொழிலாளி பலி!

மதுரை அருகே தென்னூரை சேர்ந்தவர் வீரபத்திரன் (50 ). இவர் கட்டிடத்தில் கம்பி கட்டும் தொழிலாளி. வடக்கு வெளி வீதியில் பள்ளி ஒன்றில் கட்டிடப் பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அவர் 2வது மாடியில் சாரத்தில் நின்றபடி கம்பி கட்டிக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 28, 2025
செங்கை: பஸ்ஸில் Luggage-ஐ மறந்தால் இத பண்ணுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
WPL: அதிக விலைக்கு ஏலம் போன டாப் 7 வீராங்கனைகள்!

நேற்று நடைபெற்று முடிந்த WPL ஏலத்தில் அணிகள் பணத்தை கொட்டி வீராங்கனைகளை வாங்கியுள்ளன. ₹50 லட்சம் அடிப்படை விலை கொண்ட ஒரு வீராங்கனை ₹3.20 கோடிக்கு ஏலம் போனது தான் இன்று ஹாட்டாபிக். இது மட்டுமின்றி, இந்த ஏலத்தின் டாப் 7 ஒப்பந்தங்களை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். WPL தொடரில் உங்களின் ஃபேவரிட் வீராங்கனை யார்?


